×

ரிசர்வ் ஆசிரியர்கள் காத்திருப்பு பெரம்பலூர் அருகே கீழப்புலியூரில் குழந்தையை கடத்தியதாக அல்லோலப்பட்ட கிராமம் பக்கத்து வீட்டு மாடியிலிருந்து சிரித்தபடி வந்ததால் நிம்மதி

பெரம்பலூர்,டிச.30: பெரம்பலூர் அருகே குழந்தையால் கிராமமே அல்லோலப் பட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வளைதளங்களில் காற்றாய் பரவிவந்தபோது 4மணிநேரம் கழித்து பக் கத்துவீட்டு மாடியில் தூங்கிவிட்டு, சிரித்தபடி வந்த குழந்தையால் ஊரே நிம்மதி அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, கீழப்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ், பிரியா ஆகியோரது மகள் அனன்யா(3). சதீஷ் வெளி நாட்டில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலை யில் நேற்றுகாலை 9.30 மணி முதல் வீட்டில் அனன் யாவைக் காணவில்லை. பக்கத்து வீட்டிலும், தெருவி லும், பக்கத்துதெருவிலும் தேடிப்பார்த்த பிரியா, பிறகு கதறிஅழுதபடி தனது மகளைக் கண்டுபிடித்துத் தருமாறு மங்களமேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இதனைக் கேள்விப்பட்ட பக்கத்து கிராமத்தை சேர் ந்த ஒருவர் அனன்யாவின் படத்துடன் குழந்தையை காணவில்லை கண்டுபிடித்தால் தங்கள் செல்போன் எண்ணிற்குத் தெரியப் படுத்தவும் என வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்டார்.
இது பேஸ்புக், யு-டியூப் வரை பரவத் தொடங்கியது. பக்கத்து தெருவினரும் குளம், குட்டை, கிணறுகளில் தவறி விழுந்திருக்குமோ என பயந்துஆளுக்கொரு திசை யாகத்தேடத்தொடங்கினர். குழந்தையை திருடன்தான் தூக்கிச் சென்றிருப்பான் என சந்தேகித்த இளைஞர்கள் பைக்கினை எடுத்துக் கொண்டு பக்கத்து கிராம ங்கள் வரை சென்றுதிரும் பினர். குழந்தையைக் காணாமல் ஊரே அல்லோல ப் பட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் காணாமல் போனதாக தேடப்பட்ட குழந்தை அனன்யா அருகி லிருந்த வீட்டுக்காரரான வேலாயுதம் மகன் பச்சை முத்து என்பவரது வீட்டின் மாடியில் விளையாட்டுவாக்கில் தூங்கிவிட்டு 4 மணி நேரம் கழித்து பகல் 1.30 மணியளவில் தனது வீட்டிற்கு மீண்டும் வந்து சேர்ந்தது. இதனைக் கண்ட பிரியா கதறித் துடித்து குழந்தையை தூக்கிக் கொண் டு கொஞ்சி மகிழ்ந்தார். பிறகு மீண்டும் சமூக வளை தளங்களில் குழந்தை கி டைத்தத் தகவல் பரவத் தொடங்கியது. குழந்தை திரும்பக் கிடைத்தில் தாய், உறவினரோடு கிராமமே நிம்தி பெருமூச்சடைந்தது.

Tags : Reserve teachers ,baby ,village ,Peelapalur ,Perambalur ,Allolapaladu ,
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி