×

விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை கேங்மேன் உடல்தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு எழுத்துதேர்வு பயிற்சி முகாம்

பெரம்பலூர், டிச.30: பெரம்பலூரில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக மின்வாரியத்தில் கேங்-மேன் பணிநியமன எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி முகாம். 280பேர் பங்கேற்றனர். தமிழக அளவில் மின்வாரியத்தில் கம்பம் நடுதல், கம்பிகளை இழுத்துக் கட்டுதல், புதியமின் பாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேங்-மேன் காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கு விண்ணப்பித்தவர்களில் அழைப் பாணை அனுப்பி வைக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் 18ம் தேதிவரை உடல் தகுதித் தேர்வு மாநில மெங்கும் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் 4 ரோடு அரு கேயுள்ள தமிழ்நாடு மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் கேங்-மேன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல்தகுதித் தேர்வு, மின் வாரிய மேற்பார்வைப் பொ றியாளர் சுப்பையா மேற்பா ர்வையில் நடந்தது. அதில் 9 நாட்களில் பங்கேற்ற மொத்தம் 1,050 பேர்களில் பல் வேறு விதிகளின் அடிப்ப டையில் 396பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தக் கட்டமாக எழுத்து த்தேர்வு நடைபெறவுள்ளது. இதனையொட்டி பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு அலுவலகத்தில் எழுத்துத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவதற்கான 2நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்தப் பயிற்சி வகுப்பிற்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார். பயிற்சியை மாநிலத் தலைவர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். மத்திய அமைப் பின் நிர்வாகிகள் தமிழ்ச் செல்வன், பன்னீர்செல்வம், குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்துத் தேர்வுக்கான பயிற்சிகளை ஆசிரியர்கள் ஆல்பர்ட், இமானுவேல் ஆ கிய இருவரும் நடத்தினர். அதில் பொதுஅறிவு, பாது காப்புக் கருவிகளின் பயன்பாடு, முதலுதவி குறித்து முந்தைய எழுத்துத் தேர்வுகளின் மாதிரி வினா விடைகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் 280 பேர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

Tags :
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது