தா.பழூர் கடைவீதியில் உள்ள ஓட்டலில் சிலிண்டர் கசிவால் திடீர் தீவிபத்து

தா.பழூர், டிச. 30: தா.பழூர் கடைவீதியில் உள்ள ஓட்டலில் சிலிண்டர் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் பரணி (47). இவர் தனது ஓட்டலில் உள்ள சிலிண்டர் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு எதிர்பாராதவிதமாக கடை முழுவதும் தீ பற்றியது. இதனால் அதிர்ச்சியான பரணி, தீயை அணைக்க போராடினார். ஆனால் தீ கட்டுக்குள் வராததால் தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள், தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் பொதுமக்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.மேலும் சிலிண்டர் தீர்ந்து போனதாலும் தீ அணைந்தது. இருப்பினும் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

Related Stories:

More
>