×

வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை ஆலத்தூர் ஒன்றியத்தில் 174 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு தேர்தல் பணியில் 1,200 அலுவலர்கள்

பாடாலூர், டிச. 30: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பின் 303 பதவிகளுக்கு 174 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வாக்கு பெட்டிகள் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பின் 359 பதவிகளில் 2 ஊராட்சி தலைவர் உள்ளிட்ட 56 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 303 பதவிகளுக்கு 859 பேர் போட்டியிடுகின்றனர். இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு இன்று (30ம் தேதி) தேர்தல் நடக்கிறது.

இதற்காக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பகுதிகளில் 174 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் 89,406 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். தேர்தலி–்ல் போட்டியிட மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 12 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 101 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 208 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 782 பேரும் என மொத்தம் 1,103 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதில் 4 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 184 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது. சாத்தனூர் ஊராட்சி தலைவராக குழந்தைவேல், குரும்பபாளையம் ஊராட்சி தலைவராக தனலட்சுமி சின்னசாமி ஆகிய 2 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 54 வார்டு உறுப்பினர்கள் என 56 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் மீதமுள்ள 303 பதவிகளுக்கு 859 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 2 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு 9 பேரும், 18 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 62 பேரும், 37 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 130 பேரும், 246 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 658 பேரும் என 303 பதவிகளுக்கு 859 பேர் போட்டியிடுகின்றனர். இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 174 வாக்குச்சாவடி மையங்களுக்கும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து போலீசார் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் வேன்களில் அனுப்பி வைக்கப்பட்டன. 1,200க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குச்சாவடி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : polling booth ,polling booths ,Alathur Union ,
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு