×

கறம்பக்குடி ஒன்றிய உள்ளாட்சி தேர்தல் நிறைவு வாக்கு எண்ணிக்கை மையமான மழையூர் அரசு பள்ளிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு

கறம்பக்குடி,டிச.30: கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் உள்ளாட்சி தேர்தல் நிறைவானதையடுத்து வாக்கு எண்ணிக்கை மையமான மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 37 ஊராட்சி தலைவர் 16 ஒன்றிய குழு உறுப்பினர் 2 மாவட்ட குழு உறுப்பினர் 176 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 231 பதவிகளுக்கு கடந்த 27ம் தேதி அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடைபெற்றது. வரும் ஜன.2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் மழையூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை 2 ம் தேதி காலை 8 மணிக்கு துவங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான அரசு மேல் நிலை பள்ளியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணிகள் பலப்படுத்த பட்டுள்ளன.

பள்ளியில் தடுப்பு கட்டைகள் மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மாவட்ட தேர்தல் ஆணையர் தேர்தல் பார்வையாளர்கள் காவல் துறை உயர் அதிகாரிகள் மாவட்ட திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் தினமும் வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டு செல்கின்றனர். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 64 வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரிகள் தேர்தல் அலுவலர்கள் செய்தியாளர்கள் வந்து செல்லும் வகையில் அதற்கான வழிகள் தேர்வு செய்து சிறப்பு பேரி கார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன மேலும் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் , கிராம ஊராட்சி தலைவர் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் என தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அந்தந்த வேட்பாளர்களின் முகவர்கள் பார்வையிட தடுப்பு கட்டைகள் கூண்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன மேலும் இரவு நேரங்களில் பாதுகாப்பை பலத்தும் வகையில் பாதுகாப்பிற்காக அதிக அளவில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : school polling center ,Karampakkudy ,
× RELATED மக்களவை தேர்தல் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு