கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

திருமயம்.டிச.30: அரிமளத்தில் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்புத்துறையினர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். அரிமளம் பழனியப்பன் தெருவில் ராமாயி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கிணறு ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியைச் சேர்ந்த வெற்றியப்பனுக்கு சொந்தமான பசுமாடு மேய்ச்சலுக்குச் சென்றது. கிணறு பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் கிணற்றைச் சுற்றி புதர் செடி மண்டிக்கிடந்தது. இதனை அறியாத மாடு அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றபோது எதிர்பாராதவிதமாக புதர் மண்டிய கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனையறிந்த அப்பகுதியினர் திருமயம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories:

>