×

உள்ளாட்சி தேர்தலையொட்டி தஞ்சை உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தஞ்சை, டிச. 30: தஞ்சை உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. இதற்காக 1,390 வாக்குச்சாவடிகள் அமைக்கபபட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 28 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவியிடங்கள், 276 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவியிடங்கள், 589 ஊராட்சி மன்ற தலைவர் பதவியிடங்கள், 4,569 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மொத்தம் 5,462 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கி 16ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 17,606 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் வேட்புமனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடி செய்யப்பட்டது, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் தவிர தற்போது மொத்தம் 13,470 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அதன்படி முதல்கட்ட தேர்தல் திருவையாறு, பூதலூர், அம்மாப்பேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய 7 ஒன்றியங்களில் கடந்த 27ம் தேதி நடந்தது. இதில் 75 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக 1,390 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளில் 11,356 அலுவலர்கள் பணிபுரியவுள்ளனர். இதில் 345 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டு மத்திய அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் என 89 பேர் தேர்தல் நுண் பார்வையாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். மேலும் 128 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 130 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவுகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் 2வது கட்ட தேர்தல் 14 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 137 ஒன்றியக்குழு உறுப்பினர், 274 ஊராட்சி மன்ற தலைவர், 1,435 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு நடக்கிறது. இதில் 3,36,481 ஆண்கள், 3,53,015 பெண்கள், மற்றவர்கள் 45 பேர் என மொத்தம் 6,89,541 பேர் வாக்களிக்கவுள்ளனர். இந்த தேர்தலில் போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஆயுதப்படை போலீசார், ஓய்வு பெற்ற போலீசார் என 2,800 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.

இதற்கான வாக்குப்பெட்டிகள் நேற்று காலை அந்தந்த ஒன்றியங்களில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டன. இதற்காக 170 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. தஞ்சை ஒன்றியத்தில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான படிவங்கள், உபகரணங்கள், வாக்குச்சீட்டு போடுவதற்கான பெட்டிகள் அனைத்தும் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன. கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் ஒன்றியம் செம்மங்குடியில் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டை மாற்றி வழங்கியதால் குளறுபடி ஏற்பட்டது. இதனால் செம்மங்குடி ஊராட்சி 8 மற்றும் 9 வார்டு தேர்தல் நிறுத்தப்பட்டது. இந்த 2 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் மேற்பார்வையில் இன்று (30ம் தேதி) தேர்தல் நடக்கிறது.

தஞ்சை மாவட்டத்தில் 2வது கட்ட தேர்தல் 14 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 137 ஒன்றியக்குழு உறுப்பினர், 274 ஊராட்சி மன்ற தலைவர், 1,435 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என 1,860 உள்ளாட்சி பதவிகளுக்கு நடக்கிறது. இதில் 3,36,481 ஆண்கள், 3,53,015 பெண்கள், மற்றவர்கள் 45 பேர் என மொத்தம் 6,89,541 பேர் வாக்களிக்கவுள்ளனர். தஞ்சை ஒன்றியத்தில் 349 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான படிவங்கள், உபகரணங்கள், வாக்குச்சீட்டு போடுவதற்கான பெட்டிகள் அனைத்தும் வாகனங்களில் எடுத்து செல்லப்பட்டன.

Tags : round ,voting ,
× RELATED சில மாநிலங்களில் பாஜக...