×

ஒரத்தநாடு பகுதி வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் ஆய்வு

ஒரத்தநாடு, டிச. 30: ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படவுள்ள இடம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாப்பு வசதியை பார்வையிட்டார்.

இதைதொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்று பேசுகையில், பயிற்சியை முழுமையாக பெற்று வாக்குப்பதிவு நாளன்று எந்த ஒரு தவறுக்கும் இடமின்றி வாக்குப்பதிவு நேர்மையாக நடத்த அனைத்து அலுவலர்களும் உறுதுணையாக இருந்து பணியை செம்மையாக செய்ய வேண்டும். அனைத்து அலுவலர்களும் தங்களுடைய தபால் வாக்குகளை உரிய படிவத்தை பெற்று செலுத்த வேண்டும் என்று கலெக்டர் கோவிந்தராவ் கூறினார்.

Tags : Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...