×

கும்பகோணத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி துவக்கம்

கும்பகோணம், டிச. 30: கும்பகோணத்தில் மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மாநில அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி நேற்று மாலை துவங்கியது. கண்காட்சியை திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குனர் மகாலிங்கம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஜனவரி 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்த கண்காட்சி மற்றும் சிறப்பு விற்பனை நடக்கிறது. கண்காட்சியில் ஈரோடு பெட்ஷீட் ரகங்கள், துண்டுகள், பவானி ஜமுக்காளம், கரூர் பெட்ஷீட், திருவண்ணாமலை ஆரணி பட்டு சேலை, திருபுவனம் பட்டு சேலை, காட்டன் சேலை, மென்பட்டு சேலை, செட்டிநாடு சேலை, ஜெயங்கொண்டம் பருத்தி சேலை, அசல் ஜரிகை பட்டு சேலை, காட்டன் சேலை, வேஷ்டிகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், சால்வைகள், ஏற்றுமதி தரம் வாய்ந்த நவீன வண்ணமிகு வடிவங்களில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கைலிகள் விற்பனைக்கு உள்ளது.

40 அரங்குகளில் இடம் பெற்றுள்ள கைத்தறி துணி விற்பனை, கண்காட்சியில் வாங்கப்படும் துணிகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடியும், பட்டு ஜவுளிகளுக்கு 10 சதவீத சங்க கழிவுடன் 30 சதவீத அரசு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பட்டுரக துணிகளுக்கு 35 முதல் 60 சதவீத சிறப்பு கழிவும் வழங்கப்படுகிறது. கண்காட்சி மூலம் ரூ.40 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் ராஜேந்திரன், கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் லெனின் மற்றும் அனைத்து கூட்டுறவு நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Commencement ,Special Handloom Exhibition ,Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...