பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் இன்று உள்ளாட்சி தேர்தல்

பட்டுக்கோட்டை, டிச. 30: பட்டுக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் இன்று நடக்கிறது. இதையொட்டி அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்கு பெட்டிகளை அனுப்பும் பணி நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்கு பெட்டிகளை வெளியில் எடுத்து ஒவ்வொரு வேன்களிலும் ஏற்றப்பட்டது. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 189 வாக்குச்சாவடிகளுக்கு 16 வேன்களில் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டது.பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், 19 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 43 ஊராட்சி தலைவர்கள், மொத்தமுள்ள 336 ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் 132 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தவிர மீதமுள்ள 204 வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதில் 43 ஊராட்சி தலைவர்களுக்கு 147 பேரும், 19 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு 71 பேரும், 2 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களுக்கு 6 பேரும், 204 வார்டு உறுப்பினர்களுக்கு 505 பேரும் களத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லும் வாகனங்கள் மற்றும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Related Stories: