×

பயணிகள் வரவேற்பு நெற்பழ நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிர்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் நெற் பழ நோயின் தாக்குதல் தென்படுகிறது. பூஞ்சாணத்தால் உருவாகும் இந் நோயானது நெற்பயிரின் பூக்கும் தருணத்திலும், கதிர் வெளிவரும் சமயத்திலும் மிகுந்து காணப்படும். 20 முதல் 25 டிகிரி செல்சியஸ் கொண்ட குறைந்த வெப்பநிலை, 90 சதத்திற்கும் அதிகமான ஈரப்பதம், இரவு நேர பனி ஆகியவை இந்நோய் தாக்குதலுக்கு ஏற்ற காலநிலையாகும். பூக்கும் தருணம் மற்றும் கதிர் வெளிவரும் சமயத்தில் மழை பெய்வதும், அப்போது நிலவும் மந்தமான சீதோஷ்ண நிலையும் இந்நோய் தீவிரமாவதற்கு காரணமாக அமைகின்றன. நெற்பழ நோய் பரவும் விதம் : வேகமான காற்று வீசும் போது ஒரு பயிரி லிருந்து மற்ற பயிர்களுக்கு பூசண வித்துக்கள் எளிதாகப் பரவும். இந்நோய் பாதிப்புக்குள்ளான விதைகள், காற்று, மண் மற்றும் நீர் மூலமாக பரவுகிறது. இந்த நோயின் பூஞ்சாண வித்துக்களால் ஒரு வயலிலிருந்து மற்ற வயல்களுக்கும் பரவும்.

நோயின் அறிகுறிகள்
இந்நோயின் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒவ்வொரு நெற்கதிர் மணிகளும் பூசணத்தின் வித்துக்களால் நிரம்பி பளபளப்பான சிறிய பந்து போன்று காட்சியளிக்கும். இந்த பூஞ்சாணப் பந்தானது முதலில் ஆரஞ்சு நிறமாகவும், பிறகு மஞ்சளும் பச்சை நிறமும் அல்லது பச்சையும் கருப்பு நிறமுமாக மாறிக் காணப்படும். முதலில் ஒரு கதிரில், ஒருசில மணிகளே நெற்பழ நோய்க்கு உள்ளாகும். தாக்குதல் மிகுந்து காணப்படும்போது கதிரில் உள்ள அனைத்து மணிகளுமே பாதிப்புக்கு உள்ளாகும். இதனால் நெல் மணிகளின் தரம் குறைந்து விடும். இதன் பாதிப்பினால் விதைகளில் மலட்டு தன்மையை உண்டாக்குகிறது. எனவே இந்நோய் பாதிப்புக்குள்ளான வயல் களிலிருந்து நெல் மணிகளை விதைக்காக பயன்படுத்தக் கூடாது.

நெற்பழ நோய் மேலாண்மை முறைகள்
இந்நோய் தாக்காத விதைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும் விதைகளை விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். வயல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் களைச் செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதிக அளவில் தழைச்சத்து உரங்கள் இடுவதைத் தவித்தல் வேண்டும். இந்நோயா னது காற்றின் மூலம் பரவுவதால் தாக்கப்பட்ட கதிர்களை வயலிலிருந்து அப்புறப்படுத்தி அழித்து விட வேண்டும். குளிர் காலங்களில் நோய் தாக்கு தலை முறையாக கண்காணிக்க வேண்டும்.

நெற்பழ நோய் தாக்குதலிலிருந்து நெற்பயிரைப் பாதுகாக்க கலப்பு கதிர் வெளி வரும்போது ஒரு முறையும், பால் பிடிக்கும் தருவாயில் ஒரு முறையும் ஒரு ஏக்கருக்கு புரோபிகோனசோல் 25 ஈசி -200 மி.லி அல்லது காப்பர் ஹைட்ராக்ஸைடு-77 டபிள்யூ 10.பி.- 500 கிராம் இவற்றில் ஏதாவது ஒரு நோய் மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இந்நோயின் தாக்குதல் அதிகமாக இருப்பின் 15 நாட்கள் கழித்து மீண்டும் தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். அறுவடைக்குப் பிறகு வைக்கோல் மற்றும் பயிர் தூர்களை நன்கு அமிக்கி உழுதுவிட வேண்டும். இதன் மூலம் அடுத்த சாகுபடியில் இவற்றில் தாக்குதல் இல்லாமல் நெற்பயிரை பாதுகாக்க முடியும்.
இவ்வாறு வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனா்.

Tags : traveler ,reception ,
× RELATED பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அரசு...