வாகன ஓட்டிகள் அவதி பெண் தற்கொலை

திருவையாறு, டிச. 30: திருவையாறு அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். திருவையாறு செண்பகப்பேட்டை தெருவை சேர்ந்த லாரி டிரைவர் செந்தில் (38). இவருக்கு மகேஸ்வரி (27) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவிக்குள் குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் கடந்த சில மாதங்களாக மகேஸ்வரி மனஉளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி வீட்டு தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் மகேஸ்வரி தூக்கிட்டு கொண்டார். இதையடுத்து அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து திருவையாறு இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

Tags : Motorists ,
× RELATED கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் மேலவீதி,...