×

திருவாரூரில் இன்று 2ம் கட்ட தேர்தல் 5 ஒன்றியங்களில் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

திருவாரூர், டிச.30: திருவாரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற உள்ள 2ம் கட்ட தேர்தலையொட்டி வாக்குப் பெட்டிகளை அனுப்புவது மற்றும் பணி ஆணை வழங்குவது போன்ற பணிகளில் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதி உள்ளாட்சி தேர்தல் என்பது முதல் கட்டமாக கடந்த 27ம் தேதி திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நடைபெற்றது. மேலும் 2ம் கட்டமாக இன்று (30ம் தேதி) வலங்கைமான், நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல் மற்றும் நன்னிலம் என 5 ஒன்றியங்களுக்கு நடைபெறுகிறது. இதில் இன்று (30ம்தேதி) நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 48 வேட்பாளர்களும், 89 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 340 வேட்பாளர்களும், 245 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 862 வேட்பாளர்களும் மற்றும் ஆயிரத்து 710 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 ஆயிரத்து 328 வேட்பாளர்களும் என மொத்தம் 2 ஆயிரத்து 53 பதவி இடங்களுக்கு 5 ஆயிரத்து 578 வேட்பாளர்கள் களத்தில் இருந்து வருகின்றனர்.

வாக்குசாவடிகள்
இந்நிலையில் இந்த 2ம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் நன்னிலம் ஒன்றியத்தில் 186 வாக்குச்சாவடிகள், குடவாசல் ஒன்றியத்தில் 191 வாக்குசாவடிகள், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 184 வாக்குச் சாவடிகளும், வலங்கைமான் ஒன்றியத்தில் 180 வாக்குச் சாவடிகளும், நீடமங்கலம் ஒன்றியத்தில் 192 வாக்குச் சாவடிகளும் என மொத்தம் 933 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் நன்னிலம் ஒன்றியத்தில் 15 வாக்குச்சாவடிகள், குடவாசல் ஒன்றியத்தில் 6 வாக்குச்சாவடிகள், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 18 வாக்குச்சாவடிகள், வலங்கைமான் ஒன்றியத்தில் 19 வாக்குச்சாவடிகள், நீடமங்கலம் ஒன்றியத்தில் 14 வாக்குச்சாவடிகள் என 5 ஒன்றியங்களிலும் மொத்தம் 72 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் வாக்குப்பதிவின் போது வீடியோ பதிவும் செய்யப்பட உள்ளது.

வாக்காளர்கள்
மேலும் இந்த தேர்தலை ஒட்டி நன்னிலம் ஒன்றியத்தில் 39 ஆயிரத்து ஓரு ஆண் வாக்காளர்கள்,38 ஆயிரத்து 41 பெண் வாக்காளர்கள் மற்றும் இதரர் ஒருவர் என 77 ஆயிரத்து 43 வாக்காளர்களும், கொரடாச்சேரி ஒன்றியத்தில் 41 ஆயிரத்து 444 ஆண், 42 ஆயிரத்து 306 பெண், இதரர் 3 பேர் என 85 ஆயிரத்து 753 வாக்காளர்களும், குடவாசல் ஒன்றியத்தில் 38 ஆயிரத்து 264 ஆண், 37 ஆயிரத்து 139 பெண் மற்றும் இதரர் 2 பேர் என 75 ஆயிரத்து 405 வாக்காளர்களும், வலங்கைமான் ஒன்றியத்தில் 33 ஆயிரத்து 834 ஆண், 33 ஆயிரத்து 433 பெண், இதார் 2 பேர் என 67 ஆயிரத்து 269 வாக்காளர்களும், நீடாமங்கலம் ஒன்றியத்தில் 45 ஆயிரத்து 78 ஆண், 46 ஆயிரத்து 714 பெண் மற்றும் இதரர் ஒருவர் என மொத்தம் 91 ஆயிரத்து 793 பேர்கள் என 5 ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 95 ஆயிரத்து 263 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாதுகாப்பு மற்றும் அலுவலர்கள்
மேலும் இந்த 2ம் கட்ட தேர்தலையொட்டி பாதுகாப்பிற்காக மாவட்ட எஸ்பி துரை தலைமையில் ஆயிரத்து 731 போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் இந்த தேர்தல் பணியில் நீடமங்கலம் ஒன்றியத்தில் 1,212 அலுவலர்கள், நன்னிலத்தில் 1,192 அலுவலர்கள், குடவாசலில் 1,223 அலுவலர்கள், கொரடாச்சேரியில் 1,167 அலுவலர்கள், வலங்கைமானில் 1,162 அலுவலர்கள் என மொத்தம் 5 ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரத்து 956 அலுவலர்கள் பணியில் ஈடுபடும் நிலையில் இவர்களுக்கான 3ம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று அந்தந்த ஒன்றியங்களில் நடைபெற்றது. மேலும் இந்த பயிற்சி வகுப்பு முடிந்த பின்னர் அலுவலர்களுக்கு அவர்கள் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி களுக்கான பணி ஆணை வழங்கும் பணியில் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்கு பதிவிற்கு தேவையான பதிவேடுகள் மற்றும் வாக்காளர்களுக்கு கையில் வைக்கப்படும் மை பாட்டில்கள் போன்றவை சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு வாகனங்கள் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியிலும் அலுவலர்கள் மும்முரமாக ஈடுபட்டது குறிபிடத்தக்கது.

Tags : Thiruvarur ,polling stations ,constituencies ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...