×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கிய காலாவதி மாத்திரையை சாப்பிட்டவருக்கு அலர்ஜி நோயாளிகள் அச்சம்

முத்துப்பேட்டை, டிச.30: முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் வீரபாண்டியன்(53). இவர் ரத்த சோகை, சிறுநீரக பிரச்னை காரணமாக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு வருடமாக வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார், இந்நிலையில் கடந்த 27ம் தேதி தேர்தல் காரணமாக மாதாந்திர மாத்திரைகள் வாங்க அவரால் தஞ்சை செல்ல முடியவில்லை, இதையடுத்து வீரபாண்டியன் அருகேயுள்ள எடையூர் சங்கேந்தி ஆரம்ப சுகாதார நிலையத்தில் விபரங்களை தெரிவித்து மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுள்ளார்.இந்நிலையில் திடீரென அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு உடலில் அரிப்பு, வயிற்று வலி, தலைவலி, உயர் ரத்த அழுத்தம் ஆகியன ஏற்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வட்டார மருத்துவஅலுவலர் கிள்ளிவளவன் கூறுகையில், எடையூர் சங்கேந்தி அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டதாக கூறப்படும் போலிக் ஆசிட் மாத்திரை பள்ளிகளில் படிக்கும் வளர்இளம் பெண் குழந்தைகளுக்காக வழங்கப்படும் மாத்திரையாகும். காலாவதி மாத்திரை மருந்துகள் ஆஸ்பத்திரி பயன்பாட்டில் இருக்காது. விநியோகிக்கபடுவதும் கிடையாது என அவர் தெரிவித்தார்.

Tags : Allergy sufferers ,health center ,
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...