×

வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை திருத்துறைப்பூண்டியில் காகித தொழிற்சாலை துவங்க வேண்டும்: வர்த்தக சங்கம் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி, டிச.30: திருத்துறைப்பூண்டியில் காகித தொழிற்சாலை துவங்க வேண்டும் என வர்த்தக சங்கம் வலியுறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வர்த்தக சங்க 56வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. வர்த்த சங்க தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலர் கணபதி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளார் ராமசாமி வரவு-செலவு கணக்கு படித்தார். இதில் துணை தலைவர் ஜபருல்லா, துணை செயலளர் லெட்சுமணன் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் 10, 12-ம் வகுப்பில் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சட்ட ஆலோசகர் வக்கீல் வெங்கடேஸ்வரன் புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி வைத்தார். இதில் திருத்துறைப்பூண்டியில் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய வேண்டும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சிறப்பு பொருளாதார விவசாய சிறப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு வருமான வரிவரம்பை 5 லட்சமாக உயர்த்த வேண்டும், பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வரும் காய்கறி மார்க்கெட்டை சீரமைத்து விரிவுபடுத்தி தண்ணீர் தேங்காமல் சுகாதாரமாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காரைக்குடி - மயிலாடுதுறை மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது இயக்கிய மயிலாடுதுறை - காரைக்குடி வரை ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில் கணினி முன்பதிவு மையம் துவக்க வேண்டும், திருவாரூர் - காரைகுடி அகல ரயில் பாதையில் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும், நகரில் புறவழிச் சாலை திட்டப்பணிகளை உடனே துவங்க வேண்டும், குண்டும் குழியுமாக உள்ள அனைத்து நெடுஞ்சாலையை உடனே விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நகரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும்,

விவசாயம் சார்ந்த பகுதியாக இருப்பதால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வைக்கோலை கொண்டு காகித தொழிற்சாலை உருவாக்கி வேலை வாய்ப்பு வழங்க வேண்டும், முள்ளியாறு தூர்வாரி இரண்டு புறமும் உள்ள கரையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றினால் பொதுமக்கள் பயன் பெறுவார்கள், மேம்பாலத்தை நகருக்கு வெளியே அமைத்திட வேண்டும், கொருக்கை கால்நடை பண்ணையில் இருக்கும் இடத்தில் கால்நடை மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும். ரயில் நிலையத்தின் வடக்கு பகுதி பிளாட்பாரத்திலிருந்து ஒழுங்கு முறை விற்பனைகூடத்தின் பின் பகுதியை மக்கள்பயன்பாட்டிற்கு திறந்து அனுமதிஅளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகளாக தலைவர் செந்தில்குமார், துணை தலைவர் ஜபருல்லா, செயலாளர் கணபதி, துணை செயலாளர் லெட்சுமணன், பொருளார் ராமசாமி ஆகியோர் மீண்டும் 5வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

Tags : Professors ,Start Paper Factory ,
× RELATED தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல்...