×

நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில் அபாய பள்ளம் சீரமைக்கப்படுமா?

நாங்குநேரி, டிச.30: நாங்குநேரி- மூலைக்கரைப்பட்டி சாலையில் அபாயகரமான பள்ளம்  ஏற்பட்டுள்ளதால் அதனை மூட நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர். நாங்குநேரி ரயில்வே கேட்டிலிருந்து மூலைக்கரைப்பட்டி மற்றும்  திசையன்விளைக்கு செல்லும் சாலைகள் உள்ளன. அதில் நாங்குநேரி யூனியன் அலுவலகம் அருகே இந்த சாலைகள் பிரியும் இடத்தில் தரை மண்ணுக்குள் புதைந்துள்ளதால் அங்கு ஆபத்தான பள்ளம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு திசையன்விளை சாலை விரிவாக்கத்திற்காக கூட்டு குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அதற்காக தோண்டி மூடப்பட்டதில் தற்போது மூலைக்கரைபட்டி செல்லும் சாலையின் குறுக்கே சுமார் 4 அடி நீளத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. தார் சாலையில் கீறலோ அல்லது உடைப்போ காணப்படவில்ல்லை.  இதுகுறித்து எவ்வித எச்சரிக்கை அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதனால் தொலைவில் வரும் வாகன ஓட்டிகளுக்கு இந்த பள்ளம் கண்ணுக்கு புலப்படுவதில்லை. இதன் விளைவாக அங்கு அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.எனவே போக்குவரத்து மிகுந்த நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nankuneri-Mulakiripatti ,road ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...