×

கடையம் அருகே பாலத்தில் ஏற்பட்ட பள்ளம்

கடையம், டிச.30: கடையம் அருகே அழகப்பபுரம் பாலத்தில் ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். கடையம் யூனியனுக்கு உட்பட்டது அழகப்பபுரம் ரஹ்மத் நகரில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் நடுமத்தியில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.  பல மாதங்களாக சீரமைக்கப்படாததால் பள்ளத்தில் சிமென்ட் காரைகள் உடைந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அஞ்சுகின்றனர். குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த பாலத்தின் வழியாக அரசு பஸ் சென்று வருகிறது. பாலம் மேலும் பலவீனமாகி வருகிறது.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு வரும் சாலைதான் குண்டும் குழிகளாக காட்சியளிக்கிறது. தற்போது பாலங்களும் உடைந்து வருவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகிறோம். மலையடிவார கிராமம் என்பதால் அதிகாரிகள் அலட்சியமாக இருந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு பாலத்தில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bridge ,
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!