×

பணகுடி பகுதியில் இரவு நேரத்தில் மணல் கொள்ளை

பணகுடி,டிச.30:  பணகுடி பகுதியில் இரவு நேரங்களில் மணல் கடத்தும் பணி ஜருராக நடைபெற்று வருகிறது. பணகுடி குத்திரபாஞ்சான் சாலையில் இருந்து கன்னிமார் தோப்பு பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் அதிகளவு தண்ணீர் வரத்து இருந்தது. இதனால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து அதிகளவு மணலை காட்டாற்று வெள்ளம் ஒதுக்கியது. தற்போது இங்கு தேங்கி கிடக்கும் மணலை கடத்தும் பணி இரவு நேரங்களில் அதிகாரிகளின் துணையுடன் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இரவு முழுக்க முழுக்க ஜேசிபி இயந்திரம் முலம் வழித்தடங்கள் ஏற்படுத்தி பகல் நேரத்தில் அதை அழித்து விடும் நிலையில் காலை 6 மணி அளவில் சென்று பார்த்தால் அந்த பகுதிகளில் லாரிகள் டெம்போக்கள் சென்று வந்த தடங்கள் அதிகளவு காணப்படுகிறது.

இதுதொடர்பாக பணகுடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘நாங்கள் எங்கள் கிணறுகளில் உள்ள சரல் மண்ணை வீடுகளுக்கு அல்லது பக்கத்து இடத்திற்கு மாற்ற பல முறை தாசில்தார் அலுவலகம், கனிமவள அலுவலகத்தில் கோரிக்கை வைத்தும் இதுவரை அதற்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. ஆனால் பணகுடி குத்திரபாஞ்சான் பகுதி, சிவகாமியாபுரம் பகுதி, தளவாய்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இரவு நேரங்களில் மண் மற்றும் மணல் அள்ளி பதுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் லாரி மற்றும் பெரிய டிப்பர்களில் மணல் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது என்றனர்.

Tags : Sand robbery ,cashier area ,
× RELATED மங்கலத்தில் மணல் கொள்ளையால் மாயமான இடுகாடு