×

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்

சென்னை: அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வருக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வர் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் என அறிவிப்பை வெளியிட்டார். தமிழக அரசின் இந்த நடவடிக்கையில், கடந்த காலங்களைப் போலல்லாமல், பாரபட்சம் பாராமல் அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும். மற்ற கைதிகளைப் போன்று கருணை அடிப்படையில் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளுக்கும் விடுதலையை சாத்தியமாக்க வேண்டும். இந்த விடுதலை நடவடிக்கையில் முஸ்லிம் ஆயுள்சிறைவாசிகள் மற்றும் 28 ஆண்டுக்கும் மேலாக சிறைச்சாலையில் தவிக்கும், பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலையையும் உட்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Anna ,Chennai ,TD GP GI ,S.S. ,
× RELATED குரோம்பேட்டை – ராதா நகர் இடையே ரூ.31.62...