×

டிஜிபி சைலேந்திரபாபு, எஸ்பி நாத் பங்கேற்று ஓடினர் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி குமரியில் மாரத்தான் போட்டி கென்ய வீரர்கள் சாதனை

நாகர்கோவில், டிச.30: கன்னியாகுமரியில் இருந்தும், நாகர்கோவிலில் இருந்தும் நேற்று நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் கென்ய வீரர்கள் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் மற்றும் கன்னியாகுமரி அத்லெட்டிக் அசோசியேஷன் சார்பில் தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டிகள் கன்னியாகுமரியில் இருந்தும், நாகர்கோவிலில் இருந்தும் நடத்தப்பட்டன. 21 கிமீ, 10 கி.மீ, 5 கி.மீ தூரங்களில் தனித்தனியே ஆண்கள், பெண்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டன. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கிற்கு 21 கி.மீ தூரத்திற்கு நடந்த போட்டியில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஓடினார். நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவுறும் வகையில் 10 கி.மீ, 5 கி.மீ தூரத்திற்கும் போட்டிகள் நடைபெற்றன. இதில் 10 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற போட்டியில் குமரி மாவட்ட எஸ்.பி நாத் கலந்து கொண்டு ஓடினார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தீயணைப்பு வீரர்கள், காவல் துறையினரும் பங்கேற்று ஓடினர்.
தொடர்ந்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறை டிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார். தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன் செயலாளர் லதா, சங்க தலைவர் பிரவீன் மேத்யூ, செயலாளர் காட்வின், துணை தலைவர் ஆறுமுகம் மற்றும் தமிழ்நாடு அத்லெட்டிக் அசோசியேஷன், மாவட்ட அத்லெட்டிக் அசோசியேஷன் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

21 கி.மீ பெண்கள் பிரிவில் கென்யா வீராங்கனை ஜாக்லின் முதல் பரிசும், கேரளாவை சேர்ந்த ஆஷா 2ம் பரிசும், கோவையை சேர்ந்த சோனா மூன்றாம் பரிசும், சென்னை பூங்கொடி 4ம் பரிசும் பெற்றனர்.21 கி.மீ ஆண்கள் பிரிவில் கென்யாவை சேர்ந்த வீரர்கள் மைக்கேல் முதல் பரிசும், செலோப்பஸ் செக்வொன் இரண்டாம் பரிசும், இச்சாண்ட்ரோ மூன்றாம் பரிசும், டிக்சன் 4ம் பரிசும் பெற்றனர். 10 கி.மீ ஆண்கள் பிரிவில் சிவபிரபாகரன் முதல் பரிசும், ராமன் இரண்டாம் பரிசும், வித்யாசாகர் மூன்றாம் பரிசும் பெற்றனர். 10 கி.மீ பெண்கள் பிரிவில் சவுமியா முதல் பரிசும், லைடியா இரண்டாம் பரிசும், ரம்யா மூன்றாம் பரிசும் பெற்றனர். 5 கி.மீ ஆண்கள் பிரிவில் அபினேஷ் முதல் பரிசும், அகில்ராம் 2ம் பரிசும், ராமச்சந்திரன் மூன்றாம் பரிசும் பெற்றனர். 5 கி.மீ பெண்கள் பிரிவில் அஜிதா முதல் பரிசும், ஆக்ஸ்லின் 2ம் பரிசும், ஹரிஷ்மா 3ம் பரிசும் பெற்றனர்.

Tags : DGP Sailendrababu ,race ,SP Aunath ,Kenyan Marathon ,Kumari ,
× RELATED திருமயம் அருகே 31 ஜோடிகள் பங்கேற்ற மாட்டு வண்டி பந்தயம்