×

தேங்காய் மண்டி உரிமையாளர் வீட்டில் 15 சவரன் திருட்டு குடியாத்தம் அருகே

குடியாத்தம் டிச. 30: குடியாத்தம் அருகே தேங்காய் மண்டி வியபாரியின் வீட்டு பூட்டு உதை்து 15 சவரன் நகை, கால் கிலோ வெள்ளி, காஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடிச்சென்றர்். ேவலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த கள்ளூர் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் ரியாஸ்(55), அதே பகுதியில் தேங்காய் மண்டி நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டை பூட்டி கொண்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றனர்.

பின்னர், நேற்று காலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கேட் மற்றும் கதவுகள் உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்தது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.அப்போது படுக்கை அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 சவரன் தங்க நகைகள், கால் கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் சமையலறையில் இருந்த 2 காஸ் சிலிண்டர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.இதுகுறித்த தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : cottage theft house ,house ,coconut mound owner ,
× RELATED டெல்லியில் ஒன்றிய அமைச்சர் வீடு முற்றுகை..!!