×

கோவில்பட்டியில் இன்று மாநில செஸ் போட்டி துவக்கம்

கோவில்பட்டி, டிச. 30: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவிலான செஸ் போட்டி இன்று (30ம் தேதி) துவங்குகிறது. 14 மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி பல்வேறு வகையான  விளையாட்டுப் போட்டிகளை நடத்தி, வெற்றிபெறுவோருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கி வருகிறது.  இதன்படி இந்தாண்டுக்கான மாநில செஸ் போட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இன்று (30ம் தேதி) துவங்கி தொடர்ந்து இரு நாட்கள்  நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட செஸ் அஸோசியேஷன்  மற்றும் தமிழ்நாடு செஸ் அஸோசியேஷன் சார்பில் இணைந்து நடத்தப்படும் இப்போட்டிக்கான விவரங்கள், விண்ணப்பப் படிவங்கள், விதிமுறைகள் அனைத்து  பள்ளிகளுக்கும் ஏற்கனவே அஞ்சல் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அத்துடன் விரிவான விவரங்களை www.nec.edu.in என்ற கல்லூரியின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொண்டு தெரிந்துகொள்ளலாம்.

 போட்டியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 450 மாணவ,  மாணவிகளும், 18 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 75 மாணவ, மாணவிகளும் கலந்துகொள்கின்றனர். இவர்களுக்கான போட்டிகள் மொத்தம் 9  சுற்றுக்களாக நடத்தப்படும். முடிவில் முதல் 25  இடங்களை பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். அத்துடன் முதல் 10 இடங்களை பிடிப்போருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட  உள்ளன. இத்தகவலை என கல்லூரி முதல்வர் காளிதாச முருகவேல்  தெரிவித்தார்.

Tags : State chess tournament ,
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு