×

சாத்தான்குளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

சாத்தான்குளம் , டிச. 30: சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக நடந்தது. பள்ளி முதல்வர்  நோபுள்ராஜ் தலைமை  வகித்தார். சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமி, எஸ்.ஐ. பாலகிருஷ்ணன்,  முதலூர் ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் முன்னிலை  வகித்தனர். மேலச்சாத்தான்குளம் சேகர குரு எமில்சிங் ஆரம்ப ஜெபம் செய்தார். ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகள் சங்க தென்மண்டல தலைவர் பேர்சில்  வரவேற்றார். பிரபு ரத்னா  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெனியேல்  சத்திய சபை பாஸ்டர் பால் ஆபிரகாம் கிறிஸ்துமஸ் சிறப்புரையாற்றினார்.  இதையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு  சீருடை, உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

 விழாவில் வர்த்தக சங்கத் தலைவர்  துரைராஜ், சங்கச் செயலாளர் மதுரம் செல்வராஜ், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளர்  ஏசுராஜ், மிக்கேல் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி நிர்வாகி சுசீலா, மனிதநேய  நல்லிணக்க பெருமன்ற  செயலாளர் பால்துரை, ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரித்  தாளாளர் சசிகரன். டி.என்.டிடிஏ புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்  பள்ளித் தாளாளர் கிருபாகரன், தொழிலதிபர் போவாஸ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்  பங்கராஸ்,ஒப்பந்தக்காரர் நந்தகுமார் பங்கேற்றனர். தொடர்ந்து   ஜெரால்டு சைமன் குழுவினரின்  இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஜெப்ரி சைமன்  நன்றி கூறினார்.
உடன்குடி:  இதே போல் பரமன்குறிச்சி அருகே சீயோன்நகர் பூரணகிருபை சபை சார்பில் கிறிஸ்துமஸ் விழா 9 நாட்கள் விமரிசையாக நடந்தது. இதையொட்டி கடந்த 18ம் தேதி கிறிஸ்தவ வாலிபர் ஐக்கிய சங்கம் சார்பில் கீத பவனி நடந்தது. 25ம்தேதி அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை கிறிஸ்துமஸ் கீத ஆராதனை, அருளுரை, சிறப்பு பிரார்த்தனை நடந்தது. மாலை விண்ணுலகம் மண்ணுலகை சந்திக்க வந்த நாள் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சிகள், குழு பாடல்கள், நடனங்கள், குறு நடனங்கள் நடந்தது. டிச.26ம்தேதி ஒவியம் வரைதல், கட்டுரை, பேச்சு வேத வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு சபையின் தலைமை போதகர் பெமில்ட்டன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். ஏற்பாடுகளை சபை நிர்வாகிகள், போதகர்கள் செய்திருந்தனர்.

Tags : persons ,
× RELATED தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த...