×

தொடர்ந்து பெய்த மழையால் செய்துங்கநல்லூர் குளங்கள் நிரம்பின

செய்துங்கநல்லூர், டிச.30: செய்துங்கநல்லூரில் தொடர் மழையால் கருவகுளம், கஸ்பாகுளம்  நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். செய்துங்கநல்லூரில் கருவகுளம் உள்ளது. இந்த குளத்தால் இப்பகுதியைச் சேர்ந்த வெட்டியபந்தி, விட்டிலாபுரம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட ஊர்களிலுள்ள 57 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதிகளின் நீராதாரமாகவும் விளங்குகிறது. செய்துங்கநல்லூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக மானாவாரியான இக்குளம் நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் அருகிலுள்ள கஸ்பாகுளமும் நிரம்பியது. இக்குளம்  மருதூர் மேலகால்வாய் பாசன குளமாகும். இக்குளத்தின் மூலம் சுமார் 364 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தாமிரபரணி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால் மருதூர் மேலகால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தற்போது கஸ்பாகுளம் நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.  

 இதுகுறித்து செய்துங்கநல்லூர் வட்ட விவசாய சங்க தலைவர் தியாகராஜன் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை சரி வர பெய்யாததால் இப்பகுதி குளங்கள் வறண்டு காணப்பட்டன. இதனால் கார், பிசான சாகுபடி பாதிக்கப்பட்டது. தற்போது பெய்த மழையால் இப்பகுதியிலுள்ள கருவகுளம், கஸ்பாகுளம்  நிரம்பியது. இதனால் மகிழ்ச்சியடைந்த  விவசாயிகள் தீவிரமாக சாகுபடி பணியில் ஈடுபட்டுள்ளனர்.தொழிலாளியை தாக்கியவருக்கு வலைசாத்தான்குளம், டிச. 30:  ரெட்டைகிணற்றைச் சேர்ந்தவர் ஐகோர்ட்துரை (47). கேரளாவில் வேலை பார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் அதே ஊரில் உள்ள கடையருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பியபோது பைக் சாவியை காணவில்லை. இதையடுத்து பைக் அருகே நின்றிருந்த அதே ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் மாரியப்பனிடம் (35) கேட்டபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், ஐகோர்ட் துரையை கல்லால் தாக்கி விட்டு ஓடினார். இதில் காயமடைந்த ஐகோர்ட்துரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாத்தான்குளம் எஸ்.ஐ பாலகிருஷ்ணன் தலைமறைவான மாரியப்பனைத் தேடி வருகிறார்.

Tags : downpour ,Kalinganallur ,
× RELATED அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்