×

நுண்தேர்தல் மேற்பார்வையாளர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருப்பூர்,டிச.29:திருப்பூர் மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக நாளை நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்றவிருக்கும்  நுண்தேர்தல் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
திருப்பூர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான, பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள வங்கி மற்றும் மத்திய அரசு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் கலெக்டர் விஜயகார்த்திகேயன் முன்னிலையில், திருப்பூர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் கஜலட்சுமி தலைமையில் நேற்று நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதரண தேர்தல்கள் முதற்கட்டமாக நேற்று முன்தினம் நடந்தது. இரண்டாம் கட்டமாக நாளை (30ம் தேதி) நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து 2ம் கட்டமாக நடைபெறவுள்ள 6 ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 960 வாக்குச்சாவடிகளில் 158 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. இதில், 53 வாக்குச்சாவடிகளை இணையதள கண்காணிப்பு மூலமாகவும், 47 வாக்குச்சாவடிகளில் வீடியோ கிராபி மூலமாகவும் மற்றும் 58 வாக்குச்சாவடிகளில் நுண்தேர்தல் மேற்பார்வையாளர்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படவுள்ளது. இப்பணிக்காக அந்த வாக்குச்சாவடிகளை கண்காணிக்க வங்கி மற்றும் மத்திய அரசு பணியாளர்களை நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அந்த வாக்குச்சாவடிகளுக்கான அனைத்து தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமெனவும் மற்றும் நியமிக்கப்பட்டுள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் தேர்தலை நேர்மையாக நடத்திட உறுதுணையாக இருக்க வேண்டுமெனவும் மாவட்ட கலெக்டர், தேர்தல் பார்வையாளர் ஆகியோர் தெரிவித்தனர். இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Microelectronics Supervisors ,
× RELATED பிளஸ் 2 தேர்வில் மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் சாதனை