கோவை, டிச. 29: கோவை மாநகர் தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் த.மா.கா. மாநில தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி, ஆடீஸ் வீதியில் உள்ள த.மா.கா. அலுவலகத்தில் மாவட்ட தலைவர் வி.வி. வாசன் தலைமையில் நிர்வாகிகள் கேக் வெட்டினர். இதேபோல், தண்டுமாரியம்மன் கோயிலில் மாநில செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பொன்.ஆனந்தகுமார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடந்தது. நிகழ்ச்சியில், மாநில துணை தலைவர் குனியமுத்தூர் ஆறுமுகம், இளைஞர் காங்கிரஸ் மாநில துணை தலைவர் அருண்பிரகாஷ், நிர்வாகிகள் சி.ஆர்.ரவிச்சந்திரன், ராஜ்குமார், அய்யாசாமி, வளர்மதி கணேசன், வின்சென்ட், சார்லஸ், ராம்நகர் சக்தி, குனிசை ரவிச்சந்திரன், இந்திரா, விஜயராணி, காலனி மயில்சாமி, சதீஷ், நாகராஜன், முருகானந்தம், பாலகிருஷ்ணன், சுகுமார், வேலு, சுபா ரவி, மதிபாலாகுமார், கண்ணன், ஆறுமுகம், கண்ணபிரான் கிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், தியாகராஜன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.