×

கோவை மாவட்டத்தில் ஓட்டு எண்ணிக்கை மையங்களில் கேமரா மூலம் கண்காணிப்பு

கோவை, டிச.29:   கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடந்த 5 ஒன்றியங்களில் ஓட்டுப்பதிவு முடிந்ததும்,  அனைத்து ஓட்டுப்பதிவு பெட்டிகளும், எண்ணிக்கை மையங்களுக்கு நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டன. காரமடை ஒன்றியத்தில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அசோகபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், எஸ்.எஸ். குளம் ஒன்றியத்தில் சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், அன்னூர் ஒன்றியத்தில் கேஜி மெட்ரிக் பள்ளியிலும், சூலூர் ஒன்றியத்தில் சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும்,
மதுக்கரை ஒன்றியத்தில் மதுக்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், கிணத்துக்கடவு ஒன்றியத்தில் டி.இ.எல்.சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் புளியம்பட்டி பி.ஏ பாலிடெக்னிக் கல்லூரியிலும், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், ஆனைமலை ஒன்றியத்தில் வேட்டை காரன்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களின் ஸ்ட்ராக் ரூம்களில் பெட்டிகள் வைக்கப்பட்டு,  பூட்டி சீல் வைக்கப்பட்டது. 642 ஓட்டுச்சாவடிகளில் இருந்து ஓட்டுப்பெட்டிகள் பெறப்பட்டிருந்தன. இந்த பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகளின் முன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஸ்ட்ராங்க் ரூம்கள் ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் 2ம் தேதி காலை 8 மணிக்கு திறக்கப்படும்  என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Tags : drive count centers ,Coimbatore district ,
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு