×

மகளிர் நலன் காக்க போராடுவேன் வேட்பாளர் சண்முகப்பிரியா வாக்கு சேகரிப்பு

பெருந்துறை, டிச. 29:  பெருந்துறை ஒன்றியத்தில் 12வது வார்டு சண்முகப்பிரியா ஜெயக்குமார் தென்னை மர சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
 பெருந்துறை அருகே உள்ள சரளை புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அ.தி.மு.க முன்னாள் மாணவரணி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் பதவி வகித்தவர். தற்போது இவருக்கு கட்சி சார்பில் சின்னம் ஒதுக்கப்படாததால், தென்னை மர சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். மேலும் தன் மனைவி சண்முகபிரியாவை சேர்மன் வேட்பாளராக முன்னிறுத்தி வாக்கு சேகரித்து வருகிறார்.
பெருந்துறை ஒன்றியத்தில் மொத்தம் 12 யூனியன் கவுன்சில் வார்டுகள் உள்ளது. இதில் 12வது வார்டில் கம்பளியம்பட்டி கோவில்பாளையம் ஊராட்சிகள் அடங்கியுள்ளது. இந்த ஊராட்சிகளில்  சாவடிப்பாளையம், கோவில்பாளையம், மூங்கில் பாளையம், தேர் வீதி விஜயமங்கலம், கிருஷ்ணாபுரம், மாரப்ப நாயக்கன்பாளையம், முருகம்பாளையம், காசிபாளையம், கம்பளியம்பட்டி, உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
 நேற்று மாலை இறுதி கட்ட பிரசாரத்தில் சண்முகப்பிரியா ஜெயக்குமார் ஈடுபட்டார். அப்போது அவர், என்னை வெற்றி பெற வைத்தால் மகளிர் நலன் காக்க போராடுவேன் என கூறி வாக்குசேகரித்தார். சாவடிப்பாளையம் பகுதியில் பொதுமக்களின் குறைகளை சண்முகப்பிரியா ஜெயக்குமார் கேட்டு அதற்கு தீர்வு காணப்படும் எனவும் உறுதியளித்தார். இவரது ஆதரவாளர்கள் பெருந்துறை ஒன்றிய கவுன்சில் 9 வார்டுகளிலும் தென்னை மர சின்னத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.


Tags : Candidate ,
× RELATED செலவு செய்ய பணமில்ல… பூரி காங்கிரஸ் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகல்