×

பெருந்துறையில் அனைத்து வார்டுகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும்

பெருந்துறை. டிச. 29:   பெருந்துறை சட்டமன்ற தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஈடுபட்டார்.
 ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சில் 15வது வார்டில் போட்டியிடும் ஏ.வி.பாலகிருஷ்ணன், 16வது வார்டில் போட்டியிடும் கே.ஏ.கருப்புசாமி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் 1வது வார்டு அப்புசாமி, 2வது வார்டு மல்லிகா, 3வது வார்டு பார்வதி, 4வது வார்டு உமாமகேஸ்வரன், 5வது வார்டு சுப்பிரமணியம், 6வது வார்டு திருமுருகன், 7வது வார்டு சாந்தி, 8வது வார்டு பிரவின்குமார், 9வது வார்டு கற்பக மணி, 10வது வார்டு பத்மநாதன், 11வது வார்டு ஹேமலதா, 12வது வார்டு கூட்டணி கட்சி பா.ஜ. சார்பில் போட்டியிடும் காந்திமதி ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ.  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த பிரசாரத்தில் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பேசியதாவது: பெருந்துறை தொகுதியை என்னுடைய அயராத உழைப்பால் எட்டு ஆண்டுகளில் 80 ஆண்டுகால வளர்ச்சி பெற்றிருக்கிறது. மாவட்டத்திலுள்ள அனைத்து தொகுதியை சார்ந்தவர்களும் வளர்ச்சிக்கு அடையாளம் காட்டவேண்டும் என்று சொன்னால் பெருந்துறை தொகுதியைத்தான் காட்டுவார்கள்.

ஆகவே ஒன்றிய குழுவில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் 12 வார்டு உறுப்பினர்களும் வெற்றி பெறுவார்கள். பெருந்துறையில் மக்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனர். ஆளுங்கட்சியினரின் கட்டப்பஞ்சாயத்தோ, கட்டாய நிதி வசூலோ எதுவுமில்லை. ஆளுங்கட்சியினர் எந்த துறைகளிலும் தலையிடுவதும் இல்லை. அதிகாரிகள் சுதந்திரமாக பணியாற்றுகிறார்கள். அ.தி.மு.க அரசு ஒன்பது ஆண்டுகளில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம், அரசு மருத்துவக்கல்லூரி, பாலிடெக்னி கல்லூரி பெருந்துறை தொகுதிக்கு கொண்டு வந்ததால், அ.தி.மு.க எஃகு கோட்டையாக விளங்குகிறது.
சிலநாள் சிலர் கொடுக்கும் குவார்ட்டர் பாட்டிலும், கோழி பிரியாணியும், கொஞ்சம் பணத்திற்காக மக்கள் எடுக்கிற முடிவு, கொள்கையோடும், கோட்பாட்டோடும் செயல்படுகின்ற எங்களை போன்றவர்கள் வேகத்தை குறைத்துவிடாது. எங்களது வேட்பாளருக்கு ஓட்டு போட்டு திட்டங்கள் செயல்படவில்லை என்றால், எம்.எல்.ஏ.வாகிய என்னை உரிமையோடு நீங்கள் கேட்கலாம். ஆளும் எடப்பாடி அரசு பெருந்துறை தொகுதிக்கு மட்டும் ரூ.2ஆயிரம் கோடி திட்டங்களை கொடுத்துள்ளது. என கூறினார்.

நேற்று சீனாபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாற்று கட்சியில் இருந்து தோப்பு வெங்கடாசலம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். பிரசாரத்தின்போது செல்லும் இடங்களிலெல்லாம் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்திற்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

Tags : AIADMK ,Perundurai ,
× RELATED அதிமுகவில் சேர்க்க வாய்ப்பில்லை...