×

பெருந்துறை ஒன்றிய 10வது வார்டு வேட்பாளர் ஜெயக்குமார் இறுதிகட்ட பிரசாரம்

பெருந்துறை. டிச. 29:   பெருந்துறை ஒன்றியம் 10வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு தென்னை மர சின்னத்தில் போட்டியிடும் ஜே.கே (எ) ஜெயக்குமார் தென்னை மரம் போல நூறாண்டு காலம் உங்களுக்காக பாடுபடுவேன் என இறுதிகட்ட பிரசாரத்தில் வாக்குறுதியளித்தார்.
 முன்னாள் அ.தி.மு.க. மாணவரணி இணை செயலாளராக ஜெயக்குமார் இருந்துள்ளார். 10வது ஒன்றிய வார்டில் தென்னை மர சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் பெருந்துறை பகுதியில் ஐ.ஏ.எஸ். அகாடமி இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டு ஆர்வமுள்ள மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன், என வாக்கு சேகரிப்பில் கூறினார். இந்த வார்டில் குள்ளம்பாளையம், மேட்டுப்புதூர், பொன்முடி, சீனாபுரம் ஊராட்சியில் இரண்டு வார்டுகள் உட்பட ஊராட்சிகளை உள்ளடக்கியதாகும். இந்த ஊராட்சிகளில் பொன்முடி, வலசுபாளையம், சர்க்கரை கவுண்டன்பாளையம், புதுப்பாளையம், கோபி கவுண்டன்பாளையம், மேட்டுப்பாளையம், வெங்கமேடு, குள்ளம்பாளையம், புலவர்பாளையம், கினிப்பாளையம், மேட்டுபுதூர், கல்லாகுளம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
 இதில் ஆண் வாக்காளர்கள் 2504 பேரும், பெண் வாக்காளர்கள் 2,585 பேர் என மொத்தம் 5,989 வாக்காளர்கள் உள்ளனர். ஏற்கனவே ஒன்றிய குழு உறுப்பினராக பணியாற்றி வந்ததால், இப்பகுதி மக்களின் நன் மதிப்பை ஜெயக்குமார் பெற்றுள்ளார். நேற்று மாலை தனது சொந்த ஊரான பொன்முடி பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றபோது, பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து வரவேற்றனர்.

Tags : Jayakumar ,campaign ,Ward ,Perundurai Union ,
× RELATED மீன்பிடி தடைகாலம் குறைப்பா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி