×

ஊரக உள்ளாட்சி முதல் கட்ட தேர்தலில் ஈரோடு ஒன்றியத்தில் குறைந்த வாக்குபதிவு

ஈரோடு, டிச. 29:   ஈரோடு மாவட்டத்தில் முதல் கட்ட 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 874 பதவிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 76.21 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. ஆண்கள் 77.26 சதவீதமும், பெண்கள் 75.22 சதவீதம் வாக்குகளும் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 82.31 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் குறைந்த பட்சமாக ஈரோடு ஊராட்சி ஒன்றியத்தில் 68.73 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. கோபியில் 80.40, கொடுமுடி 77.13, தூக்கநாயக்கன்பாளையத்தில் 78.22, தாளவாடியில் 70.90, மொடக்குறிச்சியில் 73.32 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED ஈரோடு மாவட்டத்தில் தென்னை மரத்தில்...