×

பேரணாம்பட்டு அருகே 6 வது நாளாக 21 யானைகள் தொடர்ந்து அட்டகாசம்: 10 ஏக்கர் வாழை, துவரை பயிர்கள் சேதம் * வனத்துறையினர் ஆய்வு

பேரணாம்பட்டு, டிச.29: பேரணாம்பட்டு அருகே நேற்று 6வது நாளாக தொடர்ந்த 21 யானைகளின் அட்டகாசத்தால் 10 ஏக்கர் பயிரிடப்பட்டிருந்த வாழை, துவரை பயிர்கள் சேதமானது. திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரக பகுதிகளில் யானைகள் கூட்டமாக முகாமிட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விளை நிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 25ம் தேதி பந்தேரப்பள்ளி கிராமத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. கடந்த 26ம்தேதி அதிகாலை மாச்சம்பட்டு, கொத்தூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் பல ஏக்கர் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

பின்னர், உமராபாத், மாச்சம்பட்டு பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் 5வது நாளாக நேற்று முன்தினமும் விவசாய நிலத்தில் அட்டகாசம் செய்தது. இதில் நேற்று முன்தினம் அதிகாலை ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையை கடந்து சென்றது. அட்டகாசம் செய்து வரும் 21 யானைகளையும் விரட்டும் பணியில் மாச்சம்பட்டு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஈடுபட்டனர். இந்நிலையில். நேற்று முன்தினம் இரவு பனங்காட்டூரை சேர்ந்த மேகலா என்பவரின் நிலத்தில் புகுந்த யானைகள் கூட்டம், கரும்பு தோட்டத்தில் புகுந்து பயிர்களை ருசி பார்த்தது. பின்னர். பாலூர் அடுத்த வால்பாறை வனப்பகுதியில் யானைக்கூட்டம் முகாமிட்டது.

நேற்று 6 வது நாளாக வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஓணாங்குட்டை அருகே உள்ள விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் ராமுலு, துவாரகேஷ் ஆகியோரின் வாழை தோட்டம், கிருஷ்ணன், ஏகநாதன் ஆகியோருக்கு சொந்தமான துவரை தோட்டம் உள்ளிட்ட 10 ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியது. தொடர்ந்து ஓணாங்குட்டை வனப்பகுதியில் உள்ள மலைக்காடுகளில் யானைகள் தங்கியுள்ளது. இந்நிலையில், சேதமடைந்த விவசாய பயிர்களை ஆம்பூர் வனக்காப்பாளர்கள் விசுவநாதன், கணேசன் ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டனர். தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் யானை கூட்டத்தால் கிராமமக்கள் பீதியடைந்து

Tags : Paranampattu ,
× RELATED ேபரணாம்பட்டு அருகே 3 ஆயிரம் லிட்டர் சாராயம் பறிமுதல்