×

நகர பகுதியில் பாதிப்பின்றி தொடர்ந்த இயல்பு வாழ்க்கை

அரியலூர், டிச. 28: நகர பகுதிகளில் இயல்பு வாழ்க்கையும், கிராம பகுதிகளில் உள்ளாட்சி தேர்தலும் என்ற இரண்டு விதமான நிலை நிலவியது. தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 (நேற்று), 30ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நேற்று நடந்தது. பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய நான்கு பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது.கிராம பகுதிகளில் மட்டும் நடைபெறும் இந்த தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தலா நான்கு வாக்கு சீட்டுகளில் வாக்களித்துள்ளனர்.

இதன் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் தேர்தல் களை கட்டி வருகிறது. ஆனால் நகர பகுதிகளான கரூர், குளித்தலை ஆகிய நகராட்சிகளிலும், 11 பேரூராட்சிகளிலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் பொதுமக்கள் தங்களின் இயல்பான வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர்.இதே நேரத்தில் அருகில் உள்ள கிராமங்களில் வாக்குப்பதிவு நடந்து வருவதால் சிலர், இதை வேடிக்கை பார்க்கும் வகையில் கிராம பகுதிகளுக்கு ஆர்வத்துடன் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.இதே நிலையில் மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளிலும் சேர்த்தே தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் அரியலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் களை கட்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.நீண்ட நேரம் காத்திருக்க முடியாமல்...

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்