×

தென்காசியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் பொதுக்குழு கூட்டம்

தென்காசி, டிச.29: தென்காசி இலஞ்சியில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள்  கூட்டமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது. நெல்லை மண்டல பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் நெல்லை காளிதாஸ், மாவட்ட பொறுப்பாளர்கள் தூத்துக்குடி கணபதிபாண்டியன், கன்னியாகுமரி அசோக், தென்காசி ஓட்டுனர் பயிற்சி உரிமையாளர்கள் சங்க செயல்தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தனர்.
 தென்காசி மாவட்ட பொறுப்பாளர் மணவாளன் வரவேற்றார். மாநில பொருளாளர் ராம்குமார் வரவு செலவு அறிக்கை வாசித்தார். அகில இந்திய தலைவர் கிரிஷ்சர்மா, வசீம், சம்பத், மாநில செயலாளர் தென்காசி வைகை குமார், மாநில தலைவர் முரளிதரன்  சிறப்புரையாற்றினர். ஈரோடு ராஜா, ரவீக்ஜான், மதுரை நல்லுசாமி, அனந்தபத்மநாபன், சேலம் தனபால், மகேஸ்வரன் ஆகியோர் பேசினர். தென்காசி ஜாகிர்உசேன் நன்றி கூறினார்.
 கூட்டத்தில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தம் 2019ன் 63 சட்டங்கள் செப்.1 முதல் அமலாக்கப்பட்டது. சாலை போக்குவரத்து அமைச்சக குழுக்கள் மீதமுள்ள சட்டங்களுக்கான விதிமுறைகளை மாற்றி அமைக்கும் பணிகளை துவங்கியுள்ளது.
ஓட்டுனர் உரிமம், பயிற்சி பள்ளிகள் சார்ந்த விதிகளை பொதுமக்களுக்கும் பயிற்சி பள்ளிகளுக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சியளித்து முறையான தேர்வுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்  ஓட்டுனர் உரிமம் வழங்குவதற்கான வழிவகைகளை சட்ட திருத்தத்தில் ஏற்படுத்த வேண்டும்.
பயிற்சி பள்ளிகளின் கட்டமைப்பினையும், பயிற்சி முறைகளையும், டிரைவிங் சிமுலேட்டர் போன்ற மேம்பட்ட பயிற்சி வசதிகளை மேற்கொள்வது, கூட்டமைப்பின் சார்பில் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் ஓட்டுனர் உரிமம் தேர்வு நடத்த கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி தேர்வு தளம் அமைப்பது, தமிழகத்தை விபத்து இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Drivers ,Training School Owners General Meeting ,Tenkasi ,
× RELATED உத்திரமேரூர் செல்லும் சாலையில் லாரி...