×

தொடர் மழையால் நிரம்பியது மானூர் பெரியகுளத்தில் கலெக்டர் ஆய்வு

மானூர், டிச.29: நெல்லை மாவட்டம் மானூர் பெரியகுளம் குடிமராமத்து பணிகள் செய்யப்பட்டு வடகிழக்கு பருவமழையால் நிரம்பியது. இதையடுத்து கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பெரியகுளத்தை பார்வையிட்டு மலர் தூவினார்.  பின்னர் அவர்கூறியதாவது: மானூர் பெரிய குளம் 448 ஹெக்டர் பரப்பளவு கொண்டது. பொதுப்பணித்துறைக்கு பாத்தியப்பட்ட இக்குளம் நெல்லை மாவட்டத்தில் விஜயநாராயணம் குளத்திற்கு அடுத்த இரண்டாவது பெரியகுளமாகும். தற்போது குளத்தில் 180 நாட்களுக்கு தேவையான கொள்ளளவு தண்ணீர் உள்ளது. இதன் மூலம் இரண்டு போகம் விளையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குளத்தால், மானூர் கிராமத்தில் 295 ஹெக்ேடர் நஞ்சையும், மாவடி கிராமத்தில் 158 ஹெக்டேர் நஞ்சையும், மதவக்குறிச்சி கிராமத்தில் 295 ஹெக்ேடர் நஞ்சையும், எட்டான்குளம் கிராமத்தில் 40 ஹெக்டேர் நஞ்சையும் பயன் ெபறும். எட்டான்குளம், மதவக்குறிச்சி, மானூர் உள்ளிட்ட 20 கிராம மக்கள் குடிநீர் வசதி பெறுவர். இதன் மூலம் சுமார் 1500 விவசாயிகள் பயன் பெறுகின்றனர்.

மறுகால் நிரம்பி வழியும் தண்ணீர் பள்ளமடை குளத்திற்கு செல்கிறது.  வரும் கோடை காலம் வரை இக்குளத்தில் நீரை படிப்படியாக பயன்படுத்தவும் தூய்மையாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களிலும் குடிமராமத்து பணிகள் மூலமாக இக்குளம் சீரமைக்கப்பட்டு ஓராண்டிற்கு தேவையான தண்ணீரை சேமிக்கவும், முட்புதற்களை அப்புறப்படுத்தவும் கண்மாய்களை சீரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். சிற்றாறு வடி நிலக்கோட்ட பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் சுப்பிரமணியன், பிஆர்ஓ செந்தில் மற்றும் மானூர் பிடிஓக்கள் உடனிருந்தனர்.

Tags : Manoor Periyakulam ,
× RELATED வடகிழக்கு பருவமழையை வரவேற்கும்...