×

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம்

தென்காசி எம்பி உள்பட 25ஆயிரம் பேர் மீது வழக்கு தென்காசி, டிச.29: தென்காசி மாவட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தனுஷ்குமார் எம்பி உட்பட 25ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும், அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. போலீஸ் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் 10ம்தேதி எஸ்டிபிஐ சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 91 பேர் மீதும் 21ம்தேதி தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 1013 பேர் மீதும் 24ம்தேதி ஐக்கிய ஜமாத் சார்பில் 13 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இதுபோல் தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடத்திய 5,400 பேர் மீதும் பொட்டல்புதூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய 2 ஆயிரம் பேர் மீதும், புளியங்குடியில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் ஈடுபட்ட 4 ஆயிரம் பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தனுஷ்குமார் எம்பி உள்பட 25,400 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி