×

நாகர்கோவில்- சென்னை சிறப்பு ரயில்

நாகர்கோவில், டிச.29:  தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு ரயில் எண்: 06004 நாகர்கோவில்- எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஒரு வழி சிறப்பு ரயில் நாகர்கோவில் ஜங்ஷனில் இருந்து இன்று (29ம் தேதி) 2.45 மணிக்கு புறப்படுவது மறுநாள் காலை 9.45 மணிக்கு எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் சென்றடையும். இந்த ரயிலுக்கு வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய இடங்களில் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.  இந்த ரயிலில் ஏசி 2 டயர்-1, ஏசி 3 டயர்-3, தூங்கும் வசதி பெட்டிகள் 11, பேன்டிரி கார் 1, இரண்டாம் வகுப்பு பெட்டிகள் 2 மற்றும் லக்கேஜ் கம் பிரேக் வேன் 2 பெட்டிகளும் இடம்பெறும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Nagercoil ,Chennai ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு