×

சட்ட விரோத தீவு பயணம் வனத்துறை அதிகாரி எச்சரிக்கை

கீழக்கரை, டிச.29:  மன்னார் வளைகுடாவின் கீழக்கரை கடல் பகுதியில் அழகிய தீவுகள் உள்ளது. கடந்த 2010ம் ஆண்டு டிச.26ல் கீழக்கரை அருகே பெரியபட்டினத்திலிருந்து பாதுகாப்பின்றி முல்லித்தீவிற்கு சுற்றுலா சென்ற போது படகு கவிழ்ந்து 16 பேர் பலியாகினர். இன்று வரை  இப்பகுதி மக்களின் நினைவு நீங்கா வலியாக உள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, சேதுக்கரை உள்ளிட்ட கடல் பகுதியில் நாட்டு படகுகளில் சட்டத்திற்கு புறம்பாக பாதுகாப்பின்றி சிலர் தீவுகளுக்கு செல்கின்றனர். இப்படகில் செல்லும் நீச்சல் தெரியாதவர்கள் விபத்தில் சிக்கினால் அவர்களை பாதுகாக்க வேண்டிய எவ்வித உபகரணங்களும் இல்லை. வனத்துறை கண்ணில் மண்ணை தூவி இது போன்ற சட்ட விரோதமாக தீவுகளுக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து கீழக்கரை சரக வனத்துறை அதிகாரி சிக்கந்தர் பாஷாவிடம் கூறுகையில், சட்ட விரோதமாக தீவுகளுக்கு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தை மீறி யாரேனும் செல்வதாக தகவல் தெரிந்தால் பொதுமக்கள் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலா என்றார்.

Tags : Wildlife official ,island trip ,
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை