×

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் கள்ளிக்குடியில் பிரசாரம்

திருமங்கலம், டிச.29:  கள்ளிக்குடி ஒன்றியத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நேற்று பிரசாரம் செய்தார். கள்ளிக்குடி ஒன்றியத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் நேற்று இறுதி கட்ட பிரசாரத்தில்ஈடுபட்டனர். ஒன்றிய கவுன்சிலுக்கு 7வது வார்டில் போட்டியிடும் அஷ்டலட்சுமி மதன்குமார், மாவட்ட கவுன்சிலர் சாந்திகாட்டுராஜா ஆகியோரை ஆதரித்து மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் பிரசாரத்தில் ஈடுபட்டார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா மற்றும் முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். டி.கல்லுப்பட்டி ஒன்றிய 4வது திமுக வேட்பாளர் ஞானம்பாண்டினை ஆதரித்தும் பிரசாரம் செய்தனர். பிரசாரத்தில் மாவட்ட பொருளாளர் பொடா நாகராஜ், பேரையூர் முன்னாள் சேர்மன் குருசாமி, திமுக மாணவரணி பாண்டிமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Kallikudi ,alliance candidates ,DMK ,
× RELATED தகாத உறவிற்கு இடையூறு கழுத்தை நெரித்து கணவர் கொலை