×

சட்டக்கல்லூரி மாணவி மாயம்

திருச்சி, டிச.29: திருச்சி சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நாகை மாணவி மாயமானார். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் தரங்கம்பாடி பொறையாறை சேர்ந்தவர் லட்சுமிகாந்தன் மகள் சுபலட்சுமி (17). இவர் திருச்சி சட்டக்கல்லூரியில் பிஏ முதலாமாண்டு படித்து வருகிறார். திருச்சியில் தனியார் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 26ம்தேதி பெற்றோருக்கு போன் செய்த சுபலட்சுமி, வீட்டுக்கு வருவதாக கூறினார். அதன்பின் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பல்வேறு தேடியும் காணாததால் இதுகுறித்து கே.கே.நகர் போலீசில் தந்தை லட்சுமிகாந்தன் புகார் அளித்தார். வழக்குபதிந்த இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, மாயமான சுபலட்சுமியை தேடி வருகிறார்.

Tags : Law school student magic ,
× RELATED அதிகமான விபத்துக்கள் நடந்து வருவதால்...