×

வாக்குப்பெட்டிகளுக்கு பலத்த பாதுகாப்பு கலெக்டர் நேரில் ஆய்வு ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு

திருச்சி, டிச.29: திருச்சி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு டிச.27 நடந்த நிலையில், மீதமுள்ள 8 ஒன்றியங்களுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் வாக்குப்பதிவு டிச.30 (நாளை) நடைபெறவுள்ளது. லால்குடி ஒன்றியத்தில் 198 வாக்குச்சாவடிகளும், மண்ணச்சநல்லூர் 217, முசிறி 162, புள்ளம்பாடி 147, தாத்தையங்கார்பேட்டை 132, தொட்டியம் 171, துறையூர் 177, உப்பிலியபுரம் 133 வாக்குச்சாவடிகள் என 8 ஒன்றியங்களில் மொத்தம் 1,337 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக 102 வீடியோ கிராபர், 52 வெப்கேமரா, 58 நுண் பார்வையாளர்கள், நியமிக்கப்பட்டுள்ளனர்.
8 ஒன்றியங்களில் மொத்தம் 7,02,253 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்காளர்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாக்களிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சிவராசு தெரிவித்துள்ளார். மேற்கண்ட 8 ஒன்றியங்களிலும் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

Tags : Ballot Boxing Safety Collector ,Inspection Rural Local Authorities ,
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை