×

முதல்கட்ட தேர்தலில் பதிவான

திருச்சி, டிச.29: திருச்சி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சிவராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊரக உள்ளாட்சி தேர்தல்2019 முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்றுமுன்தினம் விறுவிறுப்பாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குப்பெட்டிகள் வாக்குஎண்ணும் மையத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு சி.சி.டி.வி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அந்தநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான பேரூர் காவேரி பொறியியல் கல்லூரியிலும், மணிகண்டம் ஒன்றிய வாக்குப்பெட்டிகள் சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருவெறும்பூர் வாக்குப்பெட்டிகள் குண்டூர் எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியிலும், மணப்பாறை ஒன்றியத்தில் பதிவான வாக்குப்பெட்டிகள் வேங்கைகுறிச்சி குறிஞ்சி பொறியியல் கல்லூரியிலும், மருங்காபுரி ஒன்றிய வாக்குப்பெட்டிகள் வீ.கைகாட்டி விடியல் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியிலும், வையம்பட்டி வாக்குப்பெட்டிகள் ஆலத்தூர் ஆதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சிவராசு வாக்கு எண்ணும் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : election ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...