×

திருவாரூர் மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் ஒய்ந்தது

திருவாரூர், டிச.29: திருவாரூர் மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் நேற்று வேட்பாளர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் மற்றும் மன்னார்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 2ம் கட்ட தேர்தல் நாளை (30ம்தேதி ) கொரடாச்சேரி, குடவாசல், நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய 5 ஒன்றியங்களுக்கு நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் இதற்கான பிரசாரம் நிறைவடைந்தது. நேற்று காலை முதல் மாலை வரையில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாமக உட்பட பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என அனைவரும் தொடர்ந்து வீடு வீடாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.

மேலும் கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர் மற்றும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர் கலியபெருமாள் மற்றும் கட்சியின் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்து மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் கொரடாச்சேரி ஒன்றியத்தில் அத்திக்கடை, கண்கொடுதவனிதம், கமலாபுரம், பவித்திரமாணிக்கம், மணக்கால் அரசவனங்காடு, அம்மையப்பன் உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags : election campaign ,Tiruvarur district ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...