×

சீரமைப்பு விதிகள் உருவாக்கப்பட்ட படி சாலைகள்அமைக்க வேண்டும் நுகர்வோர் மையம் கோரிக்கை

திருத்துறைப்பூண்டி, டிச.29: திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையதலைவர் வக்கீல் நாகராஜன் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருத்துறைப்பூண்டி பகுதியில் போக்குவரத்து சாலைகள் மழைக்காலத்தில் வருடந்தோறும் சேதமடைகிறது. பின்னர் கோடைகாலத்தில் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படுகின்றன. சாலை பணி தனியார் ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

அதற்கு என சாலை சீரமைப்பு விதிகள் உருவாக்கப்பட்ட படி சாலைகள்அமைக்கப்பட வேண்டும். முதலில் ரோடு போக்குவரத்து விதிகள்ஒன்று. சேதமடைந்த சாலைகள்இரண்டு அடிகள் கீழ் நோண்ட பட்டு முதலில் 40 எம்எம் கனமுள்ள கம்பக்கட் பிடுமினஸ் கான்கிரீட் இடப்பட வேண்டும்.2 அதன்மேல் 50 எம்எம் கனமான தார் மெக்கடம் கலந்த மிக்ஸர் இடப்பட வேண்டும்.3 அதன்மேல் அஸ்பால்ட் மற்றும் ஜல்லி கலந்த கலவையை சூடாக பரப்பப்பட்டு ரோடு அமைத்தல் வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகளை ஒப்பந்தக்காரர்கள் பின்பற்றுவது இல்லை. இதனால் ஒப்பந்தவிதிகள் படி மூன்று வருடங்கள் இருக்கவேண்டிய சாலைகள் பத்து மாதங்களில் சேதம் அடைந்து விடுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட நுகர்வோர் மையத்திற்கு புகார்கள் வரப்பட்டு உரிய அலுவலர்களுக்கு அனுப்பியும் நடவடிக்கை இல்லை. ஆதலால் திருவாரூர் கலெக்டர் உடனடியாக இந்தியன்ரோடு போக்குவரத்து அமைச்சக விதிமுறைகளையும் முறையாக கண்காணிப்பு செய்து முறைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Consumer Center ,roads ,
× RELATED சாலை விரிவாக்க பணிக்காக மரங்கள்...