×

அன்னவாசல் ஒன்றியத்தில் வாக்கு பெட்டிகள் வைத்துள்ள அறைகள் சிசிடிவி கேமராவில் தீவிர கண்காணிப்பு

இலுப்பூர், டிச.29: அன்னவாசல் ஒன்றியத்தில் 2 மாவட்ட கவுன்சிலர், 20 ஒன்றிய கவுன்சிலர், 42 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் 244 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்காக தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. 203 வாக்குச் சாவடி மையங்களில் நடைபெற்ற இந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு என்னும் மையமான இலுப்பூரில் உள்ள ஆர்.சி மேல்நிலைப்பள்ளிக்கு விடிய விடிய கொண்டு வரப்பட்டது. பள்ளி வாளாகம் முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளியில் சுற்று சுவருக்கு மேல் 10 அடி உயரத்தில் இரும்பு தகரங்கள் அமைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது வெளியில் உள்ளவர்களுக்கு எந்தவிதமான தகவல்களும் சென்று விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பிற்காக உயரமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர்கள், வார்டு உறுக்கினர்கள் வாக்கு எண்ணிக்கைக்கு வேட்பாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கு செல்லும் முகவர்கள் ஆகியோர் சென்று வர மரக்கட்டைகள் ஊன்றப்பட்டு இரும்பு கம்பிகளால் தடுப்புகட்டைகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையில் போது பாதுகாப்பு பணிகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இரவு வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் வாக்கு எண்ணும் அறைகள், தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்ட பகுதிகள் உட்பட பள்ளி வளாகம் முழுவதும் இரவை பகலாக்கும் வண்ணம் மின் விளக்குகள் அமைக்கப்ட்டுள்ளது.

Tags : CCTV camera rooms ,
× RELATED கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம்...