×

புதுச்சேரியிலிருந்து நாகை கடத்தி வந்த 300 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகை, டிச.29: புதுச்சேரியிலிருந்து இருந்து நாகை மாவட்டம் வழியாக மதுபானம் கடத்தப்படுவதாக எஸ்பி செல்வநாகரத்தினத்திற்கு தகவல் வந்தது. இதை தடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் நேற்று மேலவாஞ்சூர் சோதனை சாவடியில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது பாண்டிச்சேரியிலிருந்து நாகையை நோக்கி வந்த காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டவுடன் டிரைவர் சிறிது தூரத்தில் காரை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டார். போலீசார் காரை சோதனை செய்ததில் பாண்டிச்சேரி மாநில சாராய பாக்கெட்கள் இருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். மேலும் 15 அட்டை பெட்டிகளில் இருந்த 150 லிட்டர் பாண்டிச்சேரி மாநில சாராய பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது. தப்பிஒடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

அதே போல் வேளாங்கண்ணி அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டாடா இன்டிகா காரை நிறுத்த முயன்றனர். டிரைவர் காரை சிறிது தூரம் ஓட்டிச்சென்று நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். போலீசார் காரை சோதனை செய்த போது 21அட்டை பெட்டிகளில் இருந்த 48 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகை கிழக்கு கடற்கரை சாலை பாப்பாகோயில் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 பேரை போலீசார் நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால் அவர்கள் பைக்கை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் 300 குவாட்டார் பாட்டில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது.

Tags : Puducherry ,
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...