×

சீர்காழியில் பரபரப்பு வாக்குபெட்டிகள் வைத்திருந்த கல்லூரி மீது கல்வீச்சு சீல்வைக்கும் போது அழைக்காததால் வேட்பாளர்கள் ஆத்திரம்

சீர்காழி, டிச.29:சீர்காழி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 27ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில்பயன்படுத்தப்பட்ட ஓட்டுப் பெட்டிகள் சீர்காழி மகளிர் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டது. நேற்று காலை வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசியல் கட்சி வேட்பாளர்களை அழைத்து வராததால் வேட்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் காவிரிப்பூம்பட்டினம் வானகிரி உள்ளிட்ட 4 ஊராட்சிகளை சேர்ந்த வார்டு எண் மற்றும் ஊராட்சிகள் பெயர்கள் எழுதப்பட்ட சீட்டுகள் வெளியே கிடந்ததால் வாக்காளர் பெட்டியை உடைத்து அதிலிருந்து வாக்குச்சீட்டுகள் மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் கல்லூரி முன்பு திரண்டு தர்ணாா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கல்லூரி மீது கல் வீசியதில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. மேலும் ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர் கல்லூரியிலிருந்து ஓடியதாக தகவல் பரவியதால் பரபரப்பு மேலும் பற்றிக் கொண்டது. இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் சீர்காழி பகுதியில் உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் சுமார் 600 மேற்பட்டோர் கல்லூரி வளாகத்தில் திரண்டனர். அப்போது சீர்காழி டிஎஸ்பிகள் வந்தனா, சாமிநாதன், இன்ஸ்பெக்டர்கள் மணிமாறன், சிங்காரவேலு செல்வம் மற்றும் போலீசார் திரண்டிருந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் உடன்பாடு ஏற்படாததால் போலீசார் கூட்டத்தை கலைந்து செல்ல வற்புறுத்தியபோது போலீசாருக்கும், அரசியல் வேட்பாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மயிலாடுதுறை ஆர்டிஓ மகாராணி வாக்குப் பெட்டிகள் வைத்துள்ள கல்லூரிக்கு வந்து அங்கு திரண்டிருந்த அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது 3 அதிகாரிகளை மாற்ற வேண்டும் என ஆர்டிஓ மகாராணியிடம் அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்தனர்.

Tags : seminar ,Sirkazhi ,
× RELATED சாயர்புரம் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்