×

குழப்பம் நீடித்ததால் கலெக்டர் உத்தரவு நாலுவேதபதி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஞானசுந்தரி தீவிர வாக்கு சேகரிப்பு

வேதாரண்யம், டிச.29: வேதாரண்யம் தாலுகா நாலுவேதபதி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர் ஞானசுந்தரி பாண்டியன். இவர் நேற்று பேரணியாக வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் தீவிர வாக்கு சேகரித்தார். நாலுவேதிபதி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலிருந்து நூற்றுக்கணக்கானோருடன் திறந்த ஜீப்பில் உலகநாதன் தெரு, அம்பேத்கர் நகர், கவுண்டர்தெரு, மூக்காச்சித்தெரு, நாயுடுதெரு, மேலத்தெரு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஊராட்சியில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வேன், சாலைகள் இல்லாத பகுதிகளில் சாலை அமைத்து தருவேன், சுத்தமான குடிநீர், தெருவிளக்கு அமைத்து தருவேன், கஜா புயலில் பாதித்த வீடுகளுக்கு கான்கிரீட் வீடுகள் அரசு நிதியுடன் கட்டித்தருவேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.வேட்பாளருடன் ஏராளமானோர் சென்றிருந்தனர்.

Tags : Gnanasundari ,Collector ,Nalwadeapati ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...