×

காரைக்கால் என்.ஐ.டியில் கணினி துறை கருத்தரங்கம்

காரைக்கால், டிச.29: காரைக்கால் திருவேட்டக்குடி அருகே இயங்கிவரும் என்.ஐ.டி கணினி துறை சார்பில், ஏ.ஐ.சி.டி.இ. பயிற்சி மற்றும் கற்றல் அகாதெமி மூலம் நிதி பெறப்பட்டு, ஹைபர்லெட்கர் மற்றும் ஈதர் பயன்படுத்தி பிளாக்செயின் பயன்பாடு அபிவிருத்தி எனும் தலைப்பில் 5 நாள் கருத்தரங்கம் நேற்று முன்தினம் தொடங்கியது. கருத்தரங்கை என்.ஐ.டி இயக்குனர் சங்கரநாராயண் தொடங்கி வைத்தார். முன்னதாக கணினி துறைத் தலைவரான உதவிப் பேராசிரியர் நரேந்திரன் ராஜகோபாலன் வரவேற்றார்.

இக்கருத்தரங்குக்கு முக்கிய பயிற்சியாளர் மற்றும் வல்லுநரான இன்னோவேஷன் டெக்னாலஜி நிறுவனம் நாராயணன், பெங்களூரு அநவத்யா மென்பொருள் நிறுவனம் குணநிதி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இக்கருத்தரங்கில் ஆந்திரம், கர்நாடகம், புதுதில்லி, தமிழ்நாடு காரைக்கால், புதுச்சேரி, கேரளா, ஆகிய மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இருந்து சுமார் 50 பேர் பங்ககேற்றுள்ளனர். கருத்தரங்க ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளரும், உதவி பேராசிரியருமான முனைவர் சந்திரசேகர் செய்திருந்தார். முடிவில், முனைவர் சுரேந்திரன் நன்றி கூறினார்.

Tags : Computer Department Seminar ,NIT ,Karaikal ,
× RELATED லுங்கி, பனியன் அணிந்து மூட்டை தூக்கும் புதுவை மாஜி அமைச்சர்: வீடியோ வைரல்