×

தேமுதிக வேட்பாளரின் சின்னம் விடுபட்ட கூழையாறு ஊராட்சிக்கு 30ம்தேதி மறு வாக்குப்பதிவு

கொள்ளிடம், டிச.29:  நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய 20 வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அதிமுக கூடணியின் தேமுதிக வேட்பாளராக ஜலபதி என்பவரும் தி.மு.க வேட்பாளராக அங்குதன் மற்றும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். 20 வது வார்டைச் சேர்ந்த கூழையாறு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகள் 660 ஆகும். இந்நிலையில் சில வாக்குச்சீட்டுகளில் தேமுதிக வின் முரசு சின்னம் விடுபட்டிருப்பதை வாக்காளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் தேமுதிக வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குசாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன் மற்றும் தேர்தல் அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து ஆய்வு செய்ததில் 50 வாக்குச்சீட்டுகளில் முரசு சின்னம் விடுபட்டது கண்டறியப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டி சீல் வைக்கப்பட்டு புத்தூரில் உள்ள அரசு தொழில்நுட்பக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கு நள்ளிரவு போலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது. இது குறித்து தேர்தல் அலுவலர் சரவணன் கூறுகையில் இச்சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில் நாகை கலெக்டர் பிரவின் வி நாயர் கூழையாறு ஊராட்சிக்கு வரும் 30ம் தேதி மறு தேர்தல் நடத்தப்படும் என உத்திரவிட்டார்.இதையெடுத்து இந்த தகவலை ஒன்றிய தேர்தல் அலுவலர் சரவணன் நேற்று மாலை வெளியிட்டார்.

Tags : Guliyaru Panchayat ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...